மனிதனின் வாழ்வே இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் கலந்ததுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா?! அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம், இதில் கலந்துகொண்டோர் / வாக்கு மொத்த எண்ணிக்கை Voters243/17Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, மனிதனின் வாழ்வே இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் கலந்ததுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
இல்லை இன்பமான வாழ்வு வாழ தன்னை திருத்திடனும் 27% (சரியான வாக்கு)
ஆமாம், காலங்காலமாக அப்படித்தானே வாழ்கிறோம் 46% (அதிக வாக்கு)
அதுதானேங்க வாழ்க்கை அனுபவம் அப்படித்தான் இருக்கும் 16% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, நாம் வாழும் இந்த உலகில் மனித பரிணாமமும், மனித வாழ்வும் அற்புதமானது என்பது எந்த ஒரு ஐயத்திற்கும் இடமில்லை. மேலும் தானும், இயற்கையும் எப்படி கலந்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல, தனக்கு மேலான சக்தி, ஆற்றல், இறை என்று அழைக்கபடும் தெய்வீகம் நமக்குள்ளாக எப்படி நிறைந்திருக்கிறது என்பதை அறிந்தவனாவான், அறிந்தவரை சித்தர்கள், யோகி, மகான், ஞானி என்கிறோம். அவரின் வழி நாமும் பயணிக்க நினைக்கிறோம்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
பிறப்பின் கடமையும், உண்மையும் உணர்ந்த சித்தர்கள், யோகி, மகான், ஞானி இவர்கள், தங்கள் வாழ்வையே, பிற மக்களும், இவ்வுயர்வு பெறவேண்டும் என்று வழிநடத்தி வருகிறார்கள், அதையே யோகம் என்றும், அந்த யோகத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு பக்தி என்றும் சொல்லி விளக்கத்தை பெற உதவுகிறார்கள்.
அவர்களின் ஆராய்ச்சியின்படி, விளக்கத்தின்படி, இந்த உலகில் துன்பம், கஷ்டம், நஷ்டம் என்று எதுவுமே இல்லை. இன்பம் மட்டுமே நிறைந்திருக்கிறது. உலகில் மட்டுமல்ல, பிரபஞ்சம் எங்கிலுமே இன்பமே. அதை அனந்தம் என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் சாராசரி மனிதர்களாகிய நமக்கு, அதை புரிந்துகொள்ள முடிவதில்லையே. உலக வாழ்க்கை என்றால், கஷ்டம், நஷ்டம், இன்பம், துன்பம் கலந்துதானே இருக்கும், இருக்கமுடியும் என்ற நம்பிக்கைக்கு ஆளாகிவிட்டோமே. தான் மட்டுமல்ல, வாழும் எல்லாமனிதர்களும் அப்படித்தானே வாழ்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம், படிக்கிறோம், பிறரால் தெரிந்தும் கொள்கிறோம். ஆனாலும் நாம் வழக்கமாக, மனிதனாகிய நாம் உயர்ந்த பிறவி, ஆறறவில் உதித்த மேன்மை கொண்டவன் என்று பெருமைபட்டுக் கொள்கிறோமே?! சரிதானா? எங்கே தவறு நிகழ்ந்துவிட்டது?
ஒரு ஐந்தறிவு விலங்கினமும், பறவையினமும் எப்படி வாழ்கிறது? அங்கேயும் அவைகளுக்கு கஷ்டம், நஷ்டம், இன்பம், துன்பம் கலந்து இருக்கிறதா? இதற்கு நாம் என்னபதில் சொல்லிவிட முடியும்? ஆனால் அவைகளின் வாழ்வை ஆராய்ந்தால், இயற்கையோடு ஒன்றி வாழும் அவை, நிறைவான வாழ்வை வாழ்வதை அறியலாம். அப்படியானால் நமக்கு என்ன நேர்ந்தது? மனிதனாகிய நாம், இயற்கையை மீறி வாழ்த்துவங்கினோம், தன்முனைப்போடு வாழத்துவங்கினோம், இயல்பை மீறி வாழ்த்துவங்கினோம், சக மனிதர்களோடு நட்பு விலக்கி, பகை விரோதம் கொண்டு எதிர்த்தோம். அவை எல்லாம் நமக்குள் ‘கர்மா என்ற வினைப்பதிவுகளாக’ பதிந்து, வழிவழியாக தொடர்ந்து நம்மை ஆட்டுவிக்கிறது. இயற்கை ஏதேனும் ஒருவகையில், இந்த கர்மாவை தீர்த்துவிடு என்றுதான் நமக்கு அறிவுறுத்துகிறது. ஆனால் நாம் அதன் தன்மையை கூட்டிக்கொண்டே வந்துகொண்டே இருக்கிறோம். இந்த பிரபஞ்சத்திலும், உலகிலும், நமக்கும், நம் வாழ்விலும் இன்பம் மட்டுமே நிறைந்திருக்கிறது என்ற உண்மையை அறியாமலேயே, அதை அனுபவிக்காமலே வாழ்ந்தும் வருகிறோம். மடிந்தும் போகிறோம். உலகம் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று நம் குழந்தைகளுக்கும் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
இன்றுமுதல் வாழ்வு குறித்து சிந்தனை செய்யுங்கள், ஆராயுங்கள், உண்மை உணருங்கள்..
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Paytm:9442783450@paytm
Present by:
0 Comments