Ticker

6/recent/ticker-posts

what is the solution for unexpected sudden problems?

எதிர்பாராத திடீர் சிக்கல் உண்டாகுமானால் நான், இதைத்தான் செய்வேன்... என்றால் உங்கள் தேர்வு?!


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 336Votes/20Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, எதிர்பாராத திடீர் சிக்கல் உண்டாகுமானால் நான், இதைத்தான் செய்வேன்... என்றால் உங்கள் தேர்வு?!

தவம் செய்து சிக்கலின் மூலம் எது? தீர்வு எது யோசிப்பேன் 45% (சரியான  வாக்கு)

எதனால் இந்த சிக்கல் வந்தது என்று ஆராய்வேன் 20% (சிறப்பு வாக்கு)

எந்த சிக்கலாக இருந்தாலும் கடந்து போய்விடுவேன் 19% (ஆறுதல் வாக்கு)

இந்த சிக்கலிருந்து காப்பாற்று என்று வேண்டுவேன் 10%

அந்த சிக்கலை எதிர்கொண்டு புலம்பி தவிப்பேன் 6%

-

அன்பர்களே, எதிர்பாராத திடீர் சிக்கல் என்று சொன்னால், அது அப்படி எதிர்பாராமல்தானே வருகிறது என்று நினைக்கத்தோன்றும், ஆனால் உண்மையாகவே நாமே விரும்பியும் சில சிக்கல்களை ஏற்றுக்கொள்கிறோம் என்பதுதான் நிகழ்கிறது. அதாவது சிக்கல் இதன்வழியாக வராது என்று பொய்யாக நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த்தமாகிறது. 

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

நம்முடைய வாழ்வில், அன்றாடம் ஏதேனும் ஒரு சிக்கல் இருப்பதை காணமுடியும். அதில் இருந்து விலகுவதும், வராமல் தடுப்பதுமே மற்றொரு சிக்கலாக மாறிவிடும். சில நம்மூலமாகவே உருவாகும், சில யாராவது நம்மை அதில் சிக்கவைத்தும் விடுவார்கள். இதில் சில உடனடியாக தீர்ந்துவிடும், சில கடந்துவிடும் என்றாலும் சில நீண்டகாலம் நம்மோடு தொக்கி நிற்கும். ஏதாவது ஒன்றிரண்டு வாழ்நாள் பூராவும்கூட தொடர்வதாக இருக்கும். 

நல்லவாய்ப்பாக நாம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை வழியாக, தவமும், தற்சோதனை வழியான அகத்தாய்வும் கற்றுக்கொண்டோம். இதனால் சிக்கலை அலசி ஆராய்ந்து களைத்திட வழியும் உண்டாகிவிடுகிறது எனலாம். ஆனாலும் இந்த வாக்கெடுப்பில் நமக்கு கிடைத்த முடிவுகளில் 45% அன்பர்களே தங்களை சிக்கலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். 20% அன்பர்கள் ஓரளவில் ஆராய்ந்து பார்ப்பேன் என்று சொல்லுவது சிறப்பு. எனினும் அவர்கள் தீர்வுக்கு வந்துவிடுதல் அவசியமாகும். 

எந்த சிக்கலாக இருந்தாலும் கடந்து போய்விடுவேன் என்று 19% அன்பர்கள் சொல்லுவது ஏற்புடையது அல்ல. இவர்கள் அந்த சிக்கலை, வேறு யாரிடமாவது தள்ளிவிட்டு, வேறொரு புதிய சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள் என்பதே உண்மை. அந்த சிக்கலை எதிர்கொண்டு புலம்பி தவிப்பேன் 6% என்ற அன்பர்கள், இதை மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் அந்த வழியில் வந்த தடங்கலை தீர்த்து, வாழ்வை சிறப்பிக்க முடியும்.

பொதுவாகவே நல்ல துரிய தவம் இயற்றி வருவோமானால், சிந்தனை தெளிவும், எண்ணங்களில் உண்மையும் கிடைக்கும். அதன் வழியாக சிக்கல் இல்லாத பாதையில் நாம் செல்லமுடியும். சிக்கல் வந்தாலும் அதை மிக சுலபமாக தீர்த்திடவும் முடியும்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

Post a Comment

0 Comments