Ticker

6/recent/ticker-posts

What will you do if suddenly there is an unidentified fear in your mind?

 மனதில் திடீரென இனம்புரியாத பயம் எழுந்தால் என்ன செய்வீர்கள்?


வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா?! அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம், இதில் கலந்துகொண்டோர் / வாக்கு மொத்த எண்ணிக்கை Voters383/20Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, மனதில் திடீரென இனம்புரியாத பயம் எழுந்தால் என்ன செய்வீர்கள்?

அருட்காப்பு சொல்லிக்கொண்டே இருப்பேன் 68% (அதிக / சரியான வாக்கு)

வாழ்க வளமுடன் தொடர்ந்து சொல்லிக்கொள்வேன்.9% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, ஒருவருடைய மனதில் பயம் தோன்றுவதற்கு பலவித காரணங்கள் உள்ளது. தனது மூன்று வயதுவரை வாழும் சூழ்நிலைதரும் மாற்றங்களே கூட, வாழ்நாள் முழுவதுக்குமான பயத்தை உருவாக்கிட காரணமாக இருக்கலாம்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாம்!

மனிதர்களாகிய நாம், உடல், உயிர், மனம் என்ற பிணைப்பில் உருவாகி வாழ்ந்துவருகிறோம். உயிர் முதலாவதாகவும், அதை தக்கவைக்க உடல் எனும் அற்புதவடிவம் இரண்டாவதாகவும், தாயின் கருப்பையில் உருவாகி வளர்கிறது. தகுந்த பத்து மாத காலத்தில் நாம் உலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறோம். பிறந்த அந்த நொடியில், நாம் உணரும், ஐம்புலன்களின் வழியான, தொடுதல், கேட்டல், பார்த்தல், சுவாசித்தல், சுவைத்தல் என்னும் நிலைகளில் ஏற்படும் மாற்றம் கூட பயத்தை உருவாக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. உதாரணமாக, பிறக்கும் முன்பு, கருப்பையில் நாம் அறிந்தது இருட்டு, ஆனால், பிறந்த உடனே, அதிக வெளிச்சத்தை உணர்கிறோம்.

மேலும் வளரும் காலத்தில் தாயின் அணைப்பில் ஒர்மிகுந்த பாதுகாப்பை உணர்கிறோம். அதில் தனிமையை கிடைத்தால் உடனே பயம் வந்துவிடும். இப்படி பலப்பல வழிகளில் இனம்புரியாத பயத்திற்கு நாம் பழகிவிடுகிறோம். பிற்காலத்தில் விபரம் அறிந்து நாம் வளர்ந்துவிட்டாலும்கூட, ஆரம்பத்தில், சிறுவயதில் நாம் பெற்ற பயந்த அனுபவங்கள் நம்மை இப்போதும் பயமுறுத்தும், அதற்கு காரணமும் அர்த்தமும் தெரிந்துவிடாது.

ஆனால் வாழும் பொழுது, தீடீரென நிகழும் சம்பவங்களில் தாக்கம், விபத்து, பிரியமனவர்களின் மரணம், என்பதும் கூட நமக்கு பயத்தை உருவாக்கிவிடும். மேலும் இயற்கை சீற்றங்களும் நமக்கு பயத்தை உண்டாக்கும். ஆவி, பேய், பிசாசு, இருட்டு போன்றவை, பயமுறுத்தாவிட்டாலும், அதுதொடர்பான கட்டுக்கதைகள் நம்மை பயமுறுத்தும்.

இதிலிருந்து தப்பிக்க... 

பூஜை அறையில் போய் உட்கார்ந்து கொள்வேன்

ஏதோ தடை என்று அமைதியாக அமர்ந்துவிடுவேன்

இறை அடையாளம் உடலில் அணிந்திருப்பதால் பயமில்லை

என்றும் சிலர் சொல்லுவார்கள். எனினும், அந்த பயத்தை நேரடியாக நாம் அணுகி, ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம், அதாவது மனம் எதனால் இப்படியான பாதிப்பை பெறுகிறது, சிந்தித்து உண்மை அறியவேண்டும் அல்லது இதனால் நான் எந்தவித பாதிப்பையும் ஏற்கமாட்டேன், கவனம் சிதறமாட்டேன், எதிர்கொள்வேன், எனக்கு பயம் இல்லை என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இதற்கு மாற்றாக, மனதை திடப்படுத்த சங்கல்பம் சொல்லிக் கொண்டு வரலாம். அது மந்திரமாக இருக்கலாம், இறைவன் பெயராக இருக்கலாம், பக்தி வழியிலான புனித வார்த்தைகளாகவும் இருக்கலாம் தவறில்லை. என்றாலும் மனவளக்கலையில் நாம் பெற்றிருக்கும் அருட்காப்பும், வாழ்க வளமுடன் என்று சொல்லும் போதும், எப்போதெல்லாம் பயம் அல்லது அதுபோன்ற உணர்வு தோன்றுகிறதோ, உடனே அருட்காப்பு சொல்லலாம், வாழ்க வளமுடன் என்று வாழ்த்தாக சொல்லலாம். மனம் சகஜமான நிலைக்கு வர அது துணை செய்யும் என்பது உறுதி. இது குறித்து உங்களுக்கு கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

வாழ்க வளமுடன்.


Post a Comment

0 Comments