பிறருக்கு ஜீவகாந்த பாய்ச்சுதல் செய்வதில் உங்களுக்கு அனுபவம், நம்பிக்கை உண்டா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 260Votes/18Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, பிறருக்கு ஜீவகாந்த பாய்ச்சுதல் செய்வதில் உங்களுக்கு அனுபவம், நம்பிக்கை உண்டா?
அனுபவம் உண்டு, நன்மை கிடைத்திருக்கிறது 40% (சரியான வாக்கு)
எனக்குத் தெரியும் ஆனால் முயற்சித்தது இல்லை 47% (அதிக வாக்கு)
அன்பர்களே, ஜீவகாந்தம் என்பது உயிராற்றலில் இருந்துவரும் அலை, அதனுள் மகத்தான அருட்பேராற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலின் வழியாகவே நம்முடைய வாழ்வும், உணர்வும், மன இயக்கமும், உடல் இயக்கமும் நடைபெறுகிறது.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை வழியாக, ஜீவகாந்தம் என்ற உண்மையை, புரிந்துகொள்கிறோம். இந்த ஜீவகாந்தமே உயிரையும் கட்டிவைத்து, குறிப்பிட்ட வாழ்நாள் வரை, நாம் வாழ வாழ்க்கையையும் அமைத்துத் தருகிறது. இந்த ஜீவகாந்தம் என்பது ஒவ்வொருநாளும் குறிப்பிட்ட அளவு, நிறையில் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய எண்ணம், சொல், செயல், உணர்வுகள் இவற்றால் செலவாகியும் விடும். இருப்பிலிருந்து செலவு அதிகமானால், அதை இயற்கை தானாக சரி செய்யும். எப்படி என்றால், நம்முடைய உடல், மன இயக்கம் அமைதியாகிவிடும். அப்போது குறையை தானாக நிவர்த்தி செய்துவிடும்.
ஏதேனும் வலி, நோய் இருந்தாலும் ஜீவகாந்தம் செலவாகிவிடும். அந்த வலி, நோய் காலத்தால் நீண்டு வருமானால், ஜீவகாந்த பற்றாக்குறை என்ற நிலைக்கு வந்துவிடும். அப்பொழுது சில மருந்துகளால் அதை சரிசெய்யமுடியும் என்றாலும், முற்றிலும் வலி, நோய் அற்ற தன்மைக்கு மாறவேண்டியது அவசியமாகும். அதற்கு வருமுன் காக்கும் வழியே, எளியமுறை உடற்பயிற்சியும், காயகல்ப யோகப்பயிற்சியும் ஆகும்.
நாம் மனவளக்கலை யோகத்தில் கற்று தேர்ந்த நிலையில், ஜீவகாந்த பெருக்கப்பயிற்சி செய்துவந்தால், நம் இருப்புக்கு அதிகமான, ஜீவகாந்த சக்தியை நமக்குள்ளாக சேமிக்கவும் முடியும். அந்த இருப்பின் மிகுதியை சிலருக்கு, பாய்ச்சுதல் மூலமாக, தரலாம். அவர்களுக்கு நன்மை தரும்.
உதாரணமாக, ஏதோ ஒரு சூழலில், அழுதுகொண்டே இருக்கும் ஒரு குழந்தைக்கு, ஜீவகாந்த பாய்ச்சுதல் செய்தால், சில நிமிடங்களில், அக்குழந்தை அமைதியாக, அழுகையை நிறுத்திவிட்டு, இயல்புக்கு வரும் அல்லது நன்றாக தூங்கிவிடும். இது அனுபவபூர்வமான உண்மையே! இதுபோல் வலி, நோயுற்றவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தர, நம் ஜீவகாந்த பாய்ச்சுதலை செய்யலாம். நல்லதுதான். இதை நல்ல அனுபவமாக்கிக் கொண்டால், ஜீவகாந்த பாய்ச்சுதல், நீங்கள் அடுத்தவரை நினைத்தாலும்கூட உதவமுடியும் என்று குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உறுதி அளிக்கிறார்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Paytm: 9442783450@paytm
Present by:
0 Comments