Ticker

6/recent/ticker-posts

Change is the only immutable

 வணக்கம் அன்பர்களே,

Mahan Shri Vethathiri Maharishi


பழையன கழிந்து புதியன வருவது இயல்புதானே?! ஒரு நாளைப்போலவே இந்தநாள் இருப்பதாக தோன்றினாலும், எதுவுமே பழையது இல்லையே. நாம் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். நம் உலகம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சூரியன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. சூரிய மண்டலமும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த பால்வெளி மண்டலமே நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அதுப்போலவே இந்த ஓகதஸ் (OHEDAS)என்னும் தளமும். சரி, இந்த ஓகதஸ் என்றால் என்ன? ‘ஓஹோ’ என்று விளிப்பாக சொல்லுகிறோம் அல்லவா, அதனுடைய சாரமான வார்த்தைதான். இதென்ன புதிதாக இருக்கிறதே என்றால் இது, ஆங்கில வார்த்தையாக, சில இணைப்பு எழுத்துக்களோடு மலர்ந்திருக்கிறது. 

பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய, வேதாத்திரியம் யோக தத்துவங்களும், உண்மைகளும் பெரும் கடல். அதில் நீந்திடவும், ஆழ்ந்து முத்தெடுத்தெடுத்து மகிழவும் வாழ்நாள் போதாது. ஆனால் நாம் வெற்றியாளர் ஆகலாம். அப்படியான வேதாத்திரிய அனுபவ உண்மைகளை இங்கேயும் பகிரலாம் என்றே தான் இந்த மாறுதல் இங்கே அமைகிறது. படித்துப்பார்க்கும் நீங்களும், ‘ஓஹோ, அப்படியா!’ என்று நீங்களும் புன்முறுவல் பூக்கலாம் அல்லவா?!

மேலும், இந்த தளம், வேதாத்திரிய சானல் வழங்கும், வேதாத்திரிய குறிப்புக்களுக்கு மாற்று தளமாக உருவெடுத்திருக்கிறது என்பதையையும் அறியத்தருகிறோம். நன்றி,

வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments