Ticker

6/recent/ticker-posts

Why deepa practice is the first level on the biomegnetism gazing practice?

ஜீவகாந்த பெருக்கப் பயிற்சியில், நேரடியாக கண்ணாடி பயிற்சி தராமல் முதலில் தீப பயிற்சி கொடுப்பது ஏன்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 268Votes/20Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, ஜீவகாந்த பெருக்கப் பயிற்சியில், நேரடியாக கண்ணாடி பயிற்சி தராமல் முதலில் தீப பயிற்சி கொடுப்பது ஏன்?

ஜீவகாந்த பெருக்கத்தை உடலும், மனமும் ஏற்கவே 67% (சரியான / அதிக வாக்கு)

அடிப்படை பயிற்சி என்பதால் அதுவே நல்லது ஆகும் 19% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, ஜீவகாந்தம் என்பது, நம் உடல் நடத்த, ஐம்புலன் வழி உணர்வுகள் பெற்று, அனுபவிக்க, மனமாகவும் செயல்படுகின்ற ஒரு மகத்தான சக்தி ஆகும். ஜீவன்களில் இது ஜீவகாந்தம் என்றும், விண்வெளியில் இது வான்கான்ந்தம் என்றும் அழைக்கப்படும்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

காந்தம் என்று சித்தர்களின் வார்த்தையையும், விளக்கத்தையும் மாறாமல், மனவளக்கலை வழியாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், வான்காந்தம், ஜீவகாந்தம் என்பதாக நமக்கு அறியத்தருக்கிறார். இந்த ஜீவகாந்தம் அன்றாடம் நம்முடைய, மன செயல்பாடுகளிலும், ஐம்புலன் வழியாக தன்மாற்ற உணர்வுகளாகவும், உடலின் அடிப்படை தேவைகளிலும் செலவாகிறது. பிறகு பற்றாக்குறை தானாக சரிசெய்யப்படுகிறது.

இந்த குறைவு நிறைவு என்ற சாராசரி அளவைத்தாண்டி, இருப்பாக வைத்துக்கொள்ள, வேதாத்திரி மகரிஷி நமக்கு தரும் பயிற்சியே ‘ஜீவகாந்த பெருக்கம்’ என்பதாகும். இதில் இரண்டு பயிற்சிமுறைகள் உண்டு. அவை, தீப ஒளிப்பயிற்சி, கண்ணாடி பயிற்சி என்பதாகும்.

இந்த இரண்டையும் ஒப்பிட்டால், கண்ணாடி பயிற்சி மிக மிக சிறந்தது என்று நம் மகரிஷியே சொல்லியுள்ளார். எனினும் நேரடியாக ‘கண்ணாடி பயிற்சி’ தந்துவிடுவதில்லை. இதற்கான முக்கிய காரணமே, இன்றைய வாக்கெடுப்பில் கேட்கப்பட்டது. 

‘ஜீவகாந்த பெருக்கம்’ என்ற முறையை, உடலும், மனமும் ஏற்றுப்பழக வேண்டும்  என்ற காரணத்தினால்தான், முதலில் அடிப்படை பயிற்சியாக ‘தீப பயிற்சி’ தரப்படுகிறது. ஏனென்றால், பெருக்கம் என்பதை அனுபவமாக பெறவேண்டும். இல்லையேல் அது வீணாக செலவும் ஆகிவிடும். பிறகு ஜீவகாந்த பெருக்க பயிற்சியால் பலனும் கிடைக்கப்போவதில்லை. இதனால் உடனடியாக, நேரடியாக கண்ணாடி பயிற்சி தரப்படுவதில்லை என்பதை புரிந்து கொள்வீர்களாக!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
9442783450@paytm

Present by:

Post a Comment

0 Comments