Ticker

6/recent/ticker-posts

What is the importance of the Vethathiriya Simplified Exercise?

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி வாதம், பித்தம், கபம் ஆகிவற்றை ஒழுங்குறச் செய்கிறதா? அல்லது அதற்கு மேலாக துணை செய்கிறதா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 184Votes/12Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி வாதம், பித்தம், கபம் ஆகிவற்றை ஒழுங்குறச் செய்கிறதா? அல்லது அதற்கு மேலாக துணை செய்கிறதா?

எந்த நோயும் அறவெ அண்டாத நிலைக்கு உயர்த்துகிறது 62% (சரியான / அதிக வாக்கு)

ஆம் வாதம் பித்தம் கபம் இவற்றை சரி செய்து காக்கிறது 16% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, மனவளக்கலை வழியாக, கிடைத்திருக்கும் தனி மனிதருக்கான, நலமாக, நோயின்றி வாழ்வதற்கான வாழ்நாள் பரிசு, ‘எளியமுறை உடற்பயிற்சி’ ஆகும். இதை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தந்திருக்கிறார்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

நாம் வாழும் இந்த உலகில், நம் உடலை உற்சாகமாக, உடல் உறுப்புக்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உடலுக்கான, உறுப்புக்களுக்கான பயிற்சி உண்டு. அவை விளையாட்டுக்களிலும் உண்டு. நோய் வருமுன் காக்கவும், வந்தபிறகு குணப்படுத்திடவும் உடற்பயிற்சிகள் உண்டு. இவை உலகில் வாழும் ஒவ்வொரு நாட்டின் வெப்பதட்ப நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கொண்டும் இருப்பதை அறியலாம்.

நம் நாட்டில், சித்தர்கள் வழியாக, உடலை காப்பது என்ற முறையில் மிகுந்த அக்கறை செலுத்தப்பட்டது. யோகத்தில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற அவர்கள், உடல்பாதிப்பு ‘வாதம், பித்தம், கபம்’ ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுகளாலும், நிலைமாறுவதாலும்  ஏற்படுகிறது என்பதை அறிந்து கொண்டார்கள். அதற்கான உடல்பயிற்சிகளையும் செய்துவந்தார்கள். காலப்போக்கில் அவைஎல்லாம் மறைந்துவிட்டாலும், அவ்வழியில் கற்றவர்கள், இந்த உலகம் முழுமைக்கும் எப்படியோ பரப்பிவிட்டார்கள் என்றும் சொல்லலாம்.

அதன்படியே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி, ஆராய்ந்து, தனக்கு கிடைத்த தகவல்களின்படி, மனிதனுக்கு தேவையான முழுமையான பயிற்சியாக வடிவமைக்கிறார். அதை தானும் செய்து பார்த்து திருத்தம் ஏற்படுத்திக் கொள்கிறார். மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்து, அந்த அனுபங்களையும், குறை, நிறைகளையும், பாதிப்பையும் கூட ஏற்று, அதையும் திருத்தி, அதனோடு உடற்பயிற்சியை இன்னும் சிறப்பாகி தந்ததே ‘வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி’ஆகும்.

இப்பயிற்சிகளின் முக்கிய நோக்கம், உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும், ‘வாதம், பித்தம், கபம்’ ஆகிய மூன்றை முறைப்படுத்தி, அந்த குறைகளை சரிசெய்வதே ஆகும். இதை இன்னும் தெளிவாக குரு மகான் வேதாத்திரி மகரிஷி ‘காற்றோட்டம், வெப்பஓட்டம், இரத்தஓட்டம்’ என்று குறிப்பிடுகின்றார். இம்மூன்றை சரி செய்வதால், எந்த நோயும் அறவெ அண்டாத நிலைக்கு உயர்த்துகிறது என்பது உறுதியே!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments