Ticker

6/recent/ticker-posts

Why someone says, I am suffering after joining in yoga only?

யோகத்திற்கு வந்த பிறகுதான் எனக்கு கஷ்டம் அதிகம், சம்பாத்தியமில்லை என்று ஒரு சொன்னால் உங்கள் பதில்?...



வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 291Votes/15Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, யோகத்திற்கு வந்த பிறகுதான் எனக்கு கஷ்டம் அதிகம், சம்பாத்தியமில்லை என்று ஒரு சொன்னால் உங்கள் பதில்?...

அப்படி நடந்தால் அது உங்கள் கர்மவினையாக இருக்கும் 64% (சரியான / அதிக வாக்கு)

அப்படியெல்லாம் இல்லை, எனக்கு சிறப்பாகவே உள்ளது 13% (சிறப்பு வாக்கு)

இதெல்லாம் தவறான எண்ணமும் கருத்துமாகும் 13% (சிறப்பு வாக்கு)

ஆமாம் எனக்கும் அந்த நிலைதான், என்ன செய்வது? 6%

அந்த சந்தேகம் எனக்கும் உண்டுதான்4%

-

அன்பர்களே, கிட்டதட்ட 65% புரிதல் உள்ள உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன், வாழ்க வளமுடன். ஆம் உங்கள் வாக்கு உண்மையே. யோகத்திற்கு வந்த பிறகுதான் எனக்கு கஷ்டம் அதிகம், சம்பாத்தியமில்லை என்று ஒரு சொன்னால் உங்கள் பதில், ‘அப்படி நடந்தால் அது உங்கள் கர்மவினையாக இருக்கும்’ என்பதே மிகச்சரியான பதிலாகும்! 

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

நாம் வாழும் இந்த உலக வாழ்வில், உண்மையாகவே சில சிரமங்கள், கஷ்டங்கள் உண்டுதான்.  அதை நாம் குறிப்பிட்ட காலத்தில், நம் உழைப்பால், தகுதியால், திறமையால், கிடைக்கும் சரியான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டும் முன்னேற வேண்டும். வாழ்க்கை தரத்தையும் முன்னேற்றிக்கொள்ள வேண்டும். அந்த வழியில் நாமும், நம் குடும்பமும் நிறைவைப் பெறலாம்.

ஆனால், மிகச்சிலர்தான் இதில் வெற்றி பெறுகிறார்கள் எனலாம். பெரும்பாலோர்க்கு அவர்களுடைய சிரமங்களும், துன்பங்களும் கூடிக்கொண்டே போகிறதே தவிர தீர்வதில்லை என்பதும் உண்டு. இதற்கு அவர்கள் சரியான பாதையை திட்டமிட்டு வகுத்துக்கொள்வதில்லை. ஏதோ எனக்கு நேர்ந்த தலையெழுத்து என்று முடங்கிவிடுகின்றனர். எல்லோருக்குமே ஓர் எழுத்துத்தான். அதுதான் பிழைப்பு என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவார். உலகில் வாழும் வரை அந்த பிழைப்பை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் விதி என்று முடங்கத்தான் தோன்றும். காரணம் நம்முடைய கர்மா என்ற வினைப்பதிவுகளின் தாக்கம். ஒரு மனிதன்  தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவற்றில் விழிப்புணர்வோடு திட்டமிட்டு, கர்மாவை திருத்தி, மிகச்சரியான பலனை பெற வழி இருக்கும் பொழுது, வருந்தலாமா? விதி என்று முடங்கலாமா? ஏழ்மை என்று வருந்தலாமா? கூடாது.

மேலும் யோகத்தில் வந்துவிட்டால், விதியை அகற்றி, விழிப்புணர்வு பெற்று, வாழ்வில் சிறக்க தன்னம்பிக்கையும் கூடிவிடுகிறது அல்லவா? உங்கள் மனம் ஆற்றல் பெற்றுவிடுகிறது, உடலும் பயிற்சிகளால் ஒத்துழைக்க துவங்கிவிடுகிறது. தவத்தால் மன ஓர்மை, ஆராய்ச்சி கூடுகிறது. இப்படியான மாற்றத்தை புரிந்துகொள்ளாமல்,  பழையபடியே உங்கள் வாழ்வை வாழலாமா? இனிமேலாவது, இந்த பதிவை படித்தபிறகாவது உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்களும் எல்லாவளங்களும் பெற்று சிறக்க, உங்கள் குடும்பமும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன், வாழ்க வளமுடன்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

Post a Comment

0 Comments