Ticker

6/recent/ticker-posts

Still moon base and waves will affect human being and mind?

சந்திரன் என்ற நிலவின் வளர்ச்சியும் தேய்வு நிலையும், வாழும் நம்முடைய மனதை பாதிக்கறதா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 342Votes/24Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, சந்திரன் என்ற நிலவின் வளர்ச்சியும் தேய்வு நிலையும், வாழும் நம்முடைய மனதை பாதிக்கறதா?

ஆம் நான் இந்த பாதிப்பை உணர்ந்துள்ளேன் 57% (அதிக வாக்கு)

அஷ்டம நாளில் தான் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது 7% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, நாம் வாழ்கின்ற பூமியை அடுத்து, 2.86 ஆயிரம் மைல் தொலைவில், நிலையாக சுற்றுவரும் துணைக்கோள், சந்திரன் என்ற நிலவு ஆகும். பொதுவான, நம்முன்னோர்கள் வகுத்தபடி, சூரியனை ஆத்ம துணைவன் என்றும், சந்திரனை மன துணைவன் என்றும் சொல்லுவார்கள். இந்த சூரியன், நிலவு ஆகியன நம் பிறப்பில் இருந்தே தன் ஆற்றலை வழங்கிவருவதாவும் சொல்லுவார்கள்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

நாம் வாழும் இந்த பூமி, சூரியக்குடும்பத்தில் மூன்றாவது கோள். நம் பூமிக்கு துணைக்கோள் சந்திரன் ஆகும். இந்த சந்திரன் மிக நெருங்கமாக உள்ளது. பூமிக்கு தன் ஒருபக்கத்தை காட்டிக்கொண்டே நிலையாக, பூமியை சுற்றிவருகிறது. மேலும் அதன் காந்த அலைகள், நாம் வாழும் பூமியில் சில தாக்கங்களை ஏற்படுத்தவும் செய்கிறது. அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் உதாரணமாக சொல்லலாம். கடலின் நீர்மட்டம் உயர்வதையும், கடல் கரையிலிருந்து உள்வாங்குவதும் நாம் அறிவோம்.


அப்படியான மாற்றங்களைத் தரும், சந்திரன் பூமியில் வாழும் பொருட்களுக்கும், உயிர்களுக்கும் பாதிப்பு தராதா? என்று சிந்தனை செய்தோர், மனிதனின் மனதை, சந்திரனின் அலைகள் தாக்கம் ஏற்படுத்துவதை அறிந்தார்கள். அதை குறிப்பெடுத்தும் வைத்தார்கள். அதன் விரிவாக்கமே ஜோதிடகலையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. அதை நாம் சரி செய்துகொள்ள, வளப்படுத்திக் கொள்ள, பக்தி வழியிலும் முறை வகுக்கப்பட்டது.

மேலும் சந்திரன், முழுநிலவாக பௌர்ணமியில் பிரகாசிக்கிறது. அடுத்த பதினைந்து நாட்களில் புதுநிலவாக, ஒளியற்று, அமாவாசையில் இருக்கிறது. மீண்டும் வரும் பதினைந்து நாட்களில் பிறையாக வளர்ந்து முழுநிலவாகிறது. முக்கியமாக, சூரியனுக்கும், பூமிக்கும் அடுத்தாக இருந்தால் பௌர்ணமியும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருந்தால் அமாவாசையும் என்பதை நினைவில் கொள்க.

சந்திரனின் காந்த அலைகள், வாழும் மனிதர்களின் மனதோடு தொடர்பு கொள்வன ஆகும். இதை முன்னோர்கள் மட்டுமல்ல, சராசரி மனிதாராகிய நாமும் அறிவோம். பௌர்ணமியில் ஒருவித நிலைபாடும், அமாவாசையில் ஒருவித நிலைபாடும் உண்டாவதை நாம் உணரமுடியும். ஆனால் அந்த உணர்வை தடுத்துக்கொள்ளும் எண்ணற்ற உலக வாழ்வியல் சூழல் உள்ளதால் உணரமுடியவில்லை. மேலும் அதை, அந்த ஆராய்ச்சியை தவிர்க்கவும் பழகிவிட்டோம்.

பெரும்பாலும் நுண்கலை வல்லுனர்கள், அமாவாசையில் வேலைகளை தவிர்ப்பார்கள். அஷ்டம சந்திரன் என்ற ராசிக்கு எட்டாமிட சந்திர நிலை நாளில், உண்மை அறிந்தோர் அமைதியாக இருப்பதை காணலாம். அறியாதோர் சிலர் இயங்கி சிக்கிக் கொள்வதையும் காணலாம்.

ஏங்க, சந்திரனுக்கு வேறே வேலையே இல்லையா?! என்றும் இங்கே கேட்டிருப்பதால், அதற்கான பதிலைக்கூட நீங்களே கண்டுபிடிக்கவும் வாய்ப்புள்ளது. சந்திரனின் காந்த அலைகள் உங்களுக்கு நன்மையே செய்யட்டும்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments