Ticker

6/recent/ticker-posts

So you learn simplified exercise after on disease level only! Correct?

உங்களுக்கு எளியமுறை உடற்பயிற்சியில் அக்கறை வந்தது ஏதேனும் உடல் தொந்தரவு வந்தபிறகுதானே? என்றால் என்ன பதில் சொல்லுவீர்கள்?


வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா?! அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம், இதில் கலந்துகொண்டோர் / வாக்கு மொத்த எண்ணிக்கை Voters206/16Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


அன்பர்களே, உங்களுக்கு எளியமுறை உடற்பயிற்சியில் அக்கறை வந்தது ஏதேனும் உடல் தொந்தரவு வந்தபிறகுதானே? என்றால் என்ன பதில் சொல்லுவீர்கள்?

ஆம் அதுதான் உண்மை, அதை தீர்க்கவே கற்றேன் 75% (அதிக வாக்கு)

இல்லை நானாகவே ஆர்வமாக கற்றேன் (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, உடல் என்பது என்ன? நாம் இந்த உலகில் வாழ்வதற்கும், இன்பதுன்பங்களை அனுபவிப்பதற்கும் என்பது பொதுவான கணக்கு. ஆனால், பிறப்பின் வழியாக கர்மா என்ற வினைப்பதிவை தீர்ப்பதும் அதன்மூலமாக ‘நான் யார்?’ என்று தன்னை அறிவதும் என்று யோகத்தின் வழிநின்ற ஞானிகள் சொல்லுவது வழக்கம். இவையெல்லாம் விட, வாழும் காலம் வரை நாம் வாழ்வதற்கு என்பது பெரும்பாலோரின் கணக்கு.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

அப்படியாக வாழும் காலம் வரை வாழ்வதற்கு உடலில் எந்த குறையும் வராமல் காக்கவேண்டும், குறை வந்தால் உடனே தீர்க்கவும் வேண்டும். ஆனால், நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், எப்படி வேண்டுமானாலும் நான் உடலை பயன்படுத்துவேன், எனக்கு நன்மைதான், இன்பம்தான் வரவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு அல்லவா? இதன் உடல் இயற்கையின் பரிணாமத்தில் வந்தது. அதை நாம் பயன்படுத்திகொள்ள இயற்கை அனுமதிக்கிறது. எனினும் பெரும்பாலான இயக்கம், இயற்கையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

நுரையீரல் வழி மூச்சுக்காற்று யாரால் நிகழ்கிறது? இதயம் இரத்த சுத்திகரிப்பு இயக்கம் யாரால் நிகழ்கிறது? அது நான் நிகழ்த்துகிறேன் என்று சொல்லமுடியுமா? அல்லது நிகழ்த்திக் காட்டிட முடியுமா?

உடலுக்கு வருமுன் காப்பதே சிறப்பு, அதன்படி, உலகில் பல்வேறு உடற்பயிற்சிகள், விளையாட்டு, வீட்டு வேலைகள், இயற்கை விவசாய வேலைகள் அமைந்தன. இவையெல்லாம் ஒன்றிணைத்து சிறப்பித்து, திருத்தம் பெற்று அமைந்ததே வேதாத்திரி மகரிசி வழங்கிய, மனவளக்கலை வழியாக நமக்கு கிடைத்த ‘எளியமுறை உடற்பயிற்சி’ ஆகும். இதை தானாகவே, பருவம் வந்த அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது மகரிஷியின் விருப்பமாகும். ஆனால், நாம் நம் உடலை கெடுத்துக்கொண்ட பிறகுதான், திருத்தம் பெற விரும்பி. பயிற்சியை கற்கிறோம். இந்நிலை மாறிடவேண்டும். இன்னமும் உடற்பயிற்சி எல்லாம் தேவையில்லாதது என்ற கருத்து நம் மக்களிடம் மேலோங்கி இருப்பதை காணவும் முடியும்.

உடலை திருத்தி அமைப்பதும், இருப்பதை போக்குவதையும் விட, வருமுன் காப்பதே சிறப்பு என்பதை உணர்ந்து, ‘எளியமுறை உடற்பயிற்சி’  கற்றுத் தேர்க. அதுபோல வாழும் காலம் வரை எல்லா உடற்பயிற்சிகளையும், முடிந்தளவில் நேரம் ஒதுக்கி செய்திடவும் வேண்டும்.

வாழ்க வளமுடன்.


-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Paytm:9442783450@paytm

Present by:

-

Post a Comment

0 Comments