Ticker

6/recent/ticker-posts

How our biomagnetism helps to someone who needs?

ஒருவருடைய ஜீவகாந்தம் மற்றவர்களுக்கு உதவுகிறதா? எப்படி?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 252Votes/21Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, ஒருவருடைய ஜீவகாந்தம் மற்றவர்களுக்கு உதவுகிறதா? எப்படி?

ஜீவகாந்தம் பெருக்காமல் கொடுக்க முடியாது 30%(சரியான  வாக்கு)

ஆம் தேவையான சக்தியை அதிகரிக்கும் 41% (அதிக வாக்கு)

உதவும் ஆனால் அதன் தன்மையை பொறுத்தது 13% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, ஜீவகாந்தம் என்ற மகத்தான ஆற்றல் குறித்து, நமக்கு தெளிவாக அறியத்தந்தவர், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே. சித்தர்கள் குறிப்பாக உணர்ந்து சொன்னபோதிலும், அதை மிகச்சரியாக விளக்குவதற்கான காலம், மக்களின் சிந்தனை உயர்வு அமையவில்லை. ஆனால் நவீன விஞ்ஞான வளர்ச்சி, மகரிஷியின் காலத்தில் உதவியது.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

மனவளக்கலை வழியாக, ஜீவகாந்தம் என்ற உண்மையை, புரிந்துகொள்ளும்படி, மின்சாரம் மூலமாக விளக்கமுடியும் என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். எப்படி ஒரு மின்சாதன பொருள்/ கருவி இயங்குவதற்கு மூல ஆற்றலாக, மின்சாரம் இருக்கிறதோ, அதுபோலவே, ஒரு ஜீவன் இயங்குவதற்கு ஜீவகாந்தம் எனும் ஆற்றல் தேவையாக இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள உதவுகிறார். ஜீவனுக்குள்ளாக இயங்குவதால், ஜீவகாந்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சம் முழுதும் இருக்கும் ஆற்றல், வான்காந்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஜீவகாந்தம், ஒரு ஜீவனுக்கு ஒரே நிலையாக இருப்பதில்லை. தினமும், ஜீவனின் செயலாலும், உடல்கருவி இயக்கத்தாலும், சிந்தனையாலும், மனதாலும், உணர்வாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. ஏதேனும் வலி வந்தாலும், நோய் ஏற்பட்டாலும் ஜீவகாந்த இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரி செய்ய இயற்கை முயற்சித்தாலும் அது முழுமையாகிவிடுவதில்லை. இதனால், ஏற்கனவே ஜீவகாந்த இருப்பை அதிகமாக வைத்திருப்பவர், தங்கள் ஜீவகாந்த ஆற்றலை, பாதிப்படைந்த இன்னொருவருக்கு வழங்கலாம் என்பதே உண்மை.

இங்கே, ஒருவருக்கொருவர், யார்வேண்டுமானாலும் கொடுக்கமுடியும் என்ற நிலை கிடையாது. ஏற்கனவே ஜீவகாந்தம் பெருக்கி, வசப்படுத்திக் கொண்டவர் மட்டுமே கொடுக்க முடியும். மேலும், அந்த கொடுக்கப்படும் ஜீவகாந்தம், எந்தவித களங்கமற்று இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். உதாரணமாக, குறிப்பிட்ட ரத்த பிரிவைமட்டுமே, இன்னொருவர் உடலும், ரத்தமும் ஏற்றுக்கொள்ளும் அல்லவா? அதைச் சொல்லலாம். முக்கியமாக, ஜீவகாந்தத்தில், கருமையத்தின் தன்மையும் கலந்திருப்பதால், கர்மா என்ற வினைப்பதிவு எழாத தூய்மை நிலையும் அவசியமாகும். இந்த தெளிவான, களங்கமற்ற, தூய்மையான ஜீவகாந்தமே, இன்னொருவருக்கு தேவையான, சக்தியை வளப்படுத்தி, அவரின் உடல், மன குறைகளை போக்கும் என்பதே உண்மை.

வான் காந்தம், ஜீவகாந்தம், அவற்றின் பெருக்கம் ஆகிய விளக்கங்களை, வேதாத்திரிய யோகவழி சானலில் அறியலாம்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Paytm: 9442783450@paytm

Present by:

Post a Comment

0 Comments