Ticker

6/recent/ticker-posts

Do you believe that you have the knowledge that surpasses the body?

உடலை மிஞ்சக்கூடிய அறிவும் திறமையும் உங்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா?! அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம், இதில் கலந்துகொண்டோர் / வாக்கு மொத்த எண்ணிக்கை Voters332/27Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, உடலை மிஞ்சக்கூடிய அறிவும் திறமையும் உங்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

மிஞ்சக்கூடிய அறிவு திறமை என்னிடமில்லை 6% (சரியான வாக்கு)

ஆமாம் நிச்சயமாக எனக்கு இருக்கிறது உண்மையே.66% (அதிக வாக்கு)


அன்பர்களே, நாம் உடலைக்கொண்டுதான் இந்த உலகில் வாழ்கிறோம். உடல் இருக்குமட்டும் உலக வாழ்வு என்றுகூட சொல்லலாம். அந்த உடல், அணு அளவில் இருந்து ஆறடி உயரத்திற்கான அளவும் பருமனோடும் வளர்ந்து நிற்பது இயற்கையில் அதிசயம் அல்லவா?! 

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

அற்புதமான பரிணாமத்தின் வழியாக, மனிதானாக மலர்ந்தவன், மன+இதனாக நின்றவன். இயற்கையையே என்ன என்று அறிந்துகொள்ளும் அறிவும், ஆராய்ச்சியும் கொண்டவன். முழுமையானவனும் ஆகும். அத்தகைய மனிதன் உடல், உயிர், மனம் என்ற மூன்றின் கூட்டு என்று இன்னும் விளக்கமாக சொல்லமுடியும். இந்த பிணப்பில் ஏதேனும் ஒன்று பாதிப்படையும் என்றால், மற்ற இரண்டும் தானாகவே சிரமத்திற்குள்ளாகும் என்பதை நாம் வாழ்வியல் அனுபவத்தில் உணரலாம். பிறர்படும் துன்பங்களை நோக்கியும் உணரலாம். இங்கே நாம் உடலை மட்டும் தேர்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

இந்த உடல், மிகச்சிறப்பான அற்புத வடிவம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் இந்த உடலா? என்ற கேள்வியை கேட்டுக்கொண்டால், நமக்கு இந்த உடல் என்று பதில் வரும். அப்படியானால் நான் யார்? என்பதை யோகத்தின் வழியாகவே அறிந்துகொள்ள வேண்டும். எனவே வாழும் வரை உடலை மதித்து, போற்றி பாதுகாப்பதும் நமக்கு முக்கிய கடமை ஆகிவிடுகிறது அல்லவா? உடற்பயிற்சி என்ற ஒன்றே, உடலை பாதுகாக்க வேண்டும் என்பதிலிருந்து உருவானதுதானே? இந்நிலையில், உடலை மிஞ்சக்கூடிய அறிவும் திறமையும்  நமக்கு இருக்கிறதா? என்று கேட்டால். இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்கமுடியும். ஏன்? இந்த உடலுக்கென்று ஓர் அறிவு, அனுபவம், செயல்பாடு, ஏற்பு, மறுப்பு, பலம், பலவீனம் உண்டு. அதை நாம் என்றுமே மீறிட முடியாது. ஐந்துபுலன்களை கொண்டு உலக இன்பங்களை அனுபவிக்கும் நாம், அளவு முறை மீறினால், ஐம்புலன்களும் முதலில் பாதிப்படைந்து, உடலும் பாதிப்புக்குள்ளாகி, நமக்கு பெரும் துன்பத்தை கொடுக்கும். உதாரணமாக, அதிக வெளிச்சத்தை நீண்ட நேரம் பார்க்க இயலாது. சினிமா, கைபேசி நீண்ட நேரம் பார்த்தால் கூட கண் சோர்வடைகிறதே? நல்ல இசையாக இருந்தாலும் நாள்முழுவதும் இசை கேட்டால், காதுகள் வலிக்கும். நல்ல உணவு என்றால் கூட, ஒருவாய்கூட அளவுக்கு மேல் உண்ண முடியாது. இப்படி பல அனுபவ உதாரணங்கள் நமக்கு உண்டுதானே?

எனவே உடலை மிஞ்சக்கூடிய அறிவும் திறமையும் நமக்கு இல்லை என்பதுதான் உண்மையும் முடிவுமாகும். எனவே உடலோடு நாம் அக்கறையோடு, மதித்து உறவாடிக் கொள்வதுதான் சரியானது. இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் உடலேயே பரிசோதனை செய்து பார்த்து, உடல் காட்டும் அறிகுறிகளை கண்டு உணர்ந்துகொள்க.

வாழ்க வளமுடன்.


-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Paytm:9442783450@paytm

Present by:

-

Post a Comment

0 Comments