Ticker

6/recent/ticker-posts

Are you decided to give a free from karma life to your beloved children?

உங்கள் குழந்தைகளுக்கு ‘கர்மா என்ற வினைபதிவை’ சொத்தாக தரமாட்டேன் என்ற முடிவில் இருக்கிறீர்களா?


வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா?! அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம், இதில் கலந்துகொண்டோர் / வாக்கு மொத்த எண்ணிக்கை Voters383/20Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, உங்கள் குழந்தைகளுக்கு ‘கர்மா என்ற வினைபதிவை’ சொத்தாக தரமாட்டேன் என்ற முடிவில் இருக்கிறீர்களா?

ஆம் நிச்சயமாக, என் வாழ்நாளுக்குள் நிகழும் 72% (அதிக / சரியான வாக்கு)

ஏதோ என்னால் முடிந்தளவு முயற்சிப்பேன் 16% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, மனிதர்களாகிய நாம் பிறப்பதற்கே, கர்மாவை தீர்ப்பதற்குக்காகவே என்று சொன்னால் யாரும் நம்பபோவது இல்லை. இந்தக்காலத்திலே கர்மாவா? அதெல்லாம் பழைய கட்டுக்கதை என்றுதான் பெரும்பாலோர் சொல்லிவருகின்றனர். கர்மா என்பதை வினைப்பயன் என்று தெளிவாக விளங்கிக் கொண்டால் உண்மை புரியும்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாம்!

நம் தாய் தந்தை ஆகியோரின் கர்ம வினைப்பதிவுகளை, அவர்கள் தீர்க்காத நிலையில், அவர்களுடைய கர்மாவும், அவர்களின் மூதாதையர்கள் தீர்க்காத கர்மாவுடன் இணைந்தே நம்மிடம் வந்துசேர்கிறது. எப்படி ஒரு தாத்தாவின், அப்பாவின் சொத்து, அடுத்த வாரிசுக்கு வந்து சேர்வது போலவே. ஆனால் நாம் தான் கர்மாவே பொய் என்கிறோமே? சரிதானா?

கர்மா என்ற வடமொழிச் சொல், செயல்பாடு என்பதை குறிக்கிறது, மேலும் செயல்பாட்டினால் எழுந்த விளைவுயும் இணைத்தே சொல்லுகிறது என்பதையும் அறியலாம். இதை குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வினைப்பயன் என்று தெளிவுபடுத்துகிறார். ஒரு வினையாற்றும் பொழுது அதனால் எழும் விளைவின் அனுபவ பதிவு என்று இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர், அறம் பாவம் இணைந்ததே மனித வாழ்க்கை அதை, பாவம் நீக்கி அறவாழ்வு வாழவேண்டும் என்கிறார். அத்தகைய அறமற்ற செயலை செய்தால், அங்கே எழும் விளைவு, நமக்கு கர்மா என்ற வினையாக பதிவாகிறது. இயற்கையின் நீதியாக விளைவு வருவதால், அறமில்லாததை பாவம் என்றும், அதை திருத்திட வேண்டும் என்பதே இதில் நமக்கு கிடைக்கும் கருத்தாகும்.

அந்த கர்ம வினைப்பதிவுகள், திருத்தம் பெற தானாகவே சந்தர்ப்பம் எழுகிறது. ஆனால் நாம் அசட்டையாக மேலும் மேலும் கர்ம வினைப்பதிவுகளை கூட்டிக் கொள்கிறோம். இதனால் நம் வாழ்வின் நோக்கம் சிதைகிறது. துன்பம் எழுகிறது. நன்மை செய்தாலும் கூட விளைவு நமக்கு பாதிப்பையே தருகிறது. இவற்றை மனவளக்கலை வழியில், அகத்தாய்வின் மூலமாக, தற்சோதனை செய்து, தீர்க்கலாம், திருத்தி அறமான வாழ்வில் வாழலாம். நம் குழந்தைகளுக்கு கர்ம வினைப்பதிவுகளற்ற வாழ்வை அமைத்துத் தரலாம். அதுதான் உண்மையிலேயே நாம் நம் குழந்தைகளுக்கு தரும் சொத்து. அப்படியான கர்ம வினைப்பதிவுகளை, அக்களங்களை போக்கிட உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.

வாழ்க வளமுடன்.


Post a Comment

0 Comments